Facebook YES WE CAN-ல் 'கனவுக்கு செயல் கொடுப்போம்' திரு. சபரி சங்கர் அவர்களது பதிவிலிருந்த நமக்குத் தேவையான ஆலோசனைகள்..
மாறுவதற்கு முன் நாம் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்.
படித்த, பண்புள்ள, தீய பழக்க வழக்கங்கள் இல்லாத, சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்.
ஒவ்வொரு நகராட்சியிலும் இருக்கும் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது ஒரு தெரு முதல் ஐந்து தெருக்கள் இருக்கும். ஒரு தெருவில் இருக்கும் படித்த நண்பர்கள் குறைந்தது ஐந்து பேர் ஒன்று சேர வேண்டும். ஒரு தெருவிற்கு ஐந்து பேர் என்றால் ஒரு வார்டிற்கு இருபத்தி ஐந்து பேர். இவர்கள் ஒன்றுபட்டு ஒரு குழுவாக அல்லது ஒரு நல அமைப்பாக இருக்க வேண்டும்.அமைப்பிற்கு ஆலோசகராக ரிடையர்ட் ஆன ஆசிரியர்கள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், வக்கில்களை வைத்துக்கொள்ளலாம்.. எல்லா வற்றிற்கும் மேலாக ஈகோ இல்லாதவராக, ஜாதி வித்யாசம் பார்க்காத, ஏழை பணக்காரன் விதயாசம் பார்க்காதவராக இருத்தல் மிக மிக முக்கியம்.
சரி, இப்பொழுது குழு அல்லது ஒரு அமைப்பை உருவாகிவிட்டது. எப்படி செயல் படுவது?. எந்த எந்த விசயங்களில் செயல் படுவது?. முதலாவதாக நாம் குடியிருக்கும் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நட்புடனும் ஒரு சகோதர சகோதரி உறவு முறையில் பழக வேண்டும். தெருவில் ஒரு சின்ன விழிப்புணர்வு கூட்டத்தை கூட்டலாம். கூட்டத்தில் யார் யார் என்ன என்ன பிரட்சனியை சந்திக்கிறார்கள் என்று கேட்கவேண்டும்.
ஒரு தெரு என்று எடுத்துக்கொண்டால்…தினந்தோறும் பல பல பிரட்சனைகளை இருக்கும். சாக்கடை அடைத்து கொண்டு இருக்கும். சாக்கடை தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டினில் தேங்கி இருக்கும். கொசு தொல்லைகள் இருக்கும். தெரு விளக்கு எரியாமல் இருக்கும். தெரு வழியே வண்டியில் வந்து போவோர் வேகமாக வருவதும் போவதுமாக இருப்பார்கள். வேகத்தடை இல்லாமல் இருக்கும். தெருவை குறுக்கு பாதையாக பயன்படுத்தி கனரக வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கும். இப்படி பல பல பிரட்சனைகள் நான் சந்தித்து கொண்டு இருக்கிறோம்.
இதற்கெல்லாம் தீர்வு காண நமது இளைஞர்கள் அமைப்பு உழைக்கலாம். சீர்படுத்தலாம். பிரட்சனைகளை தீர்க்க வழி செய்யலாம். எப்படி வெளிப்படுத்துவது. ?. வார்டு கவுன்சிலரிடம் புகார் செய்யலாம். நகராட்சியில் புகார் செய்யலாம். மாவட்ட ஆட்சியரை பார்த்து புகார் செய்யலாம்.நடவடிக்கை இல்லையா? கவலை வேண்டாம். பத்திரிகை நிருபர்களை கூப்பிட்டு குறைகளை சொல்லலாம். போட்டோ எடுத்து பத்திரிக்கையில் கொடுக்கலாம்.வீடீயோ எடுத்து லோகல் கேபிள் சேனலில் போடா சொல்லலாம். இறுதியாக ஆர்ப்பாட்டமும் போராட்டமும் செய்யலாம்.
இவ்வளவு செய்தும் நடவடிக்கை இல்லையா.தேர்தலை புறக்கணிக்கலாம். ஒரு வார்டில் ஒரு ஆயிரம் பேர் வோட்டு போடாமல் இருந்தால் சம்மந்தப்பட்ட அனைவரும் நம்மைத் தேடி ஓடி வருவர். பலர் சொல்லலாம், வோட்டு போடாமல் இருப்பது ஒரு ஜனநாயக அவமரியாதை.தேச துரோகம் என்று சொல்லலாம். அவர்களை ஒன்று கேட்கிறேன் —- உங்களுக்கு எந்த குறையும் இல்லையா?….குறைகளை சந்தித்து இல்லையா?.
என்று ஒரு தெருவில் இருக்கும் குறைகள் நிறைவுகள் ஆகுதோ அன்றுதான் இந்தியா ஒளிரும். ஒரு முழுமையான வளமான நாடாகும். ஒரு தெரு முதல் பல தெரு சேர்ந்ததுதான் ஒரு வார்டு. பல வார்டுகள் சேர்ந்ததுதான் ஓரு நகராட்சி. பல நகராட்சி சேர்ந்ததுதான் ஓரு மாநிலம். பல மாநிலங்கள் சேர்ந்ததுதான் நமது இந்திய நாடு.
நமது பிரட்சனைகளை அடிமட்டத்திலேயே அடித்தளத்திலேயே சரி செய்து விட்டோம் என்றால்…மேலே எழும்பும் கட்டிடம் படு ஸ்ட்ராங்காக இருக்கும்.
இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளில் நாம் வோட்டு போட்டும் நாம் அழைய வேண்டியுள்ளது. போராடித்தான் ஆகா வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலை மாற வேண்டும் என்றால் நாம் இளைஞர்கள் மாற வேண்டும்.
நாம் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்.

இப்பொழுது நாம் இதை செயல் படுத்தினோம் என்றால் சரியாக பத்து வருடங்களில் கண்டிப்பாக நம் நாட்டு அரசியலில், பொருளாதாரத்தில், சுற்று புற சூழ்நிலைகளில், கல்வியில், இன்னும் பல வகையில் மிகப்பெரிய மாற்றங்களை நாம் காண முடியும்.
நாம் உறுதியுடன் செயல்பட்டால் வோட்டுக்காக நம்மைத்தேடி வரும் அரசியல் வியாதிகள் மாறுவர், பயத்துடன் நம் தேவைகளை நிறைவு செய்வர், ஓடி ஓடி உழைப்பர் அல்லது அவர்களை தூக்கி எரிந்து விட்டு நாம் அவர்களுடைய இடத்தில் இருப்போம். இது நிச்சயம்.
இனி வரும் காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. இது நிச்சயம்.
நன்றி
திரு. சபரி சங்கர்.

thanks for including my points in your blog, i m so happy to see this
ReplyDeletebeen pleased to see u r comment sir...
ReplyDelete